2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தின் மொரவேவ பிரதேச செயலாளர் பிரிவில் பன்சல்ஹந்த இடத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு, ஊர்காவல் படைவீரர் உட்பட நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தாம் இவர்களை கைது செய்ததாக மொரவேவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க விஜயசிங்க தெரிவித்தார்.
 
பண்டாரநுவர ராஜகிரி விகாரை எலமுள்ள சுமணகீர்த்தி தேரர், கே.டி.எம்.மஞ்சுள பண்டார (மதுரட்ட), ஜயந்த பண்டார (மொரவேவ ஊர்காவல் படை வீரர், காணிமுத்து சங்கரலிங்கம் (மொரவேவ டி1), ஆகியோரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--