2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

திருமலையில் தொண்டர் ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னால் இன்று புதன்கிழமை காலை மறியல் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே அவர்கள் மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.00 மணிக்கு அலுவலகத்தின் வாயில் முன்னால் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டதால், அலுவலக தேவைகருதி எவரும் உள்ளே செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை காணப்பட்டது.

கல்வி அமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டபோதும் அவர் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டார். பேச்சுவார்த்தைக்கு மூன்று பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர்.

இதன்போது, அமைச்சர் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி, கல்வி அமைச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.  தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுவோர் விபரங்களை தனக்கு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு அமைச்சர் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.

நண்பகல் 1.30 மணிக்கு போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .