Super User / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
தாய்வான் வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று திருகோணமலை, சேனையூர் மத்திய கல்லூரியில் வைத்திய முகாம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள், 3 மருந்தாளர்கள், 6 தாதிகள் மற்றும் உதவியாளர்கள் அடங்கலாக 30 பேர் உள்ளனர்.
3 தினங்கள் இம்முகாம் இங்கு நடத்தப்படவுள்ளது. கண், பொதுசுகாதாரம் போன்ற பல்வேறு வைத்திய சேவைகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் 03.11.2010 புதன்கிழமை தொடக்கம் 3 தினங்கள் இதுபோன்ற மற்றொரு முகாம் பாட்டாளிபுரம் பாடசாலையிலும் நடத்தப்படவுள்ளது.
இவ்வைத்திய முகாமிற்கான இணைப்பினை திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞான குணாளன் மேற்கொண்டு வருகின்றார்.
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Mar 2026