2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

சரத்பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி திருமலையில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

இராணுவ நீதிமன்றத்தால் 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகாவை விடுவிக்க கோரி திருகோணமலையில் இன்று ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

திருகோணமலை பஸ்நிலைய முன்றலில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் நீடித்தது.

ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது அக்கட்சியின் சேருவில அமைப்பாளர் வைத்தியகலாநிதி அனுர சிறிசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி வரதன், அருணாசலம், பரசுராமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--