2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஆற்று நீரோட்டம் அதிகரித்துள்ளதால் பாதை போக்கவரத்து இடைநிறுத்தம்

Super User   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் ஷாபி நகர்  வேதத்தீவு கிராமங்களை இணைக்கும் ஒரே ஒரு மிதக்கும் பாதை  போக்கவரத்து ஆற்று நீரோட்டம் அதிகரித்துள்ளதால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேசத்திலிருந்து ஆற்றினால் பிரிக்கப்பட்டு ஒதுக்குப் புறமாக அமைந்திருக்கும் ஒரு கிராமமே வேதத்தீவாகும்.

இக்கிரமத்திற்கு பல்வேறு தேவைகளின் பொருட்டு நாளாந்தம் செல்லும் நாற்றுக்கணக்கானோர் மிதக்கும் பாதையைப் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் சிறிய அளவிளான மிதக்கும் பாதை கவிழ்ந்து விழும் நிலையில் உள்ளதால் பாதை இயக்குனர்கள் தமது பணியை இடைநிறுத்தியுள்ளனர்.

இதனால் குறித்த ஆற்றை படகின் மூலம் கடந்து செல்வதில் பயணிகள் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .