2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

திருமலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கப்பல், படகு மூலம் உணவுகள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 126,000 ஹெக்டயார் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டள்ளன. 250 குளங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதுடன் 6 குளங்கள் உடைப்பெடுத்த அதேவேளை 10 குளங்களின் அணைக்கட்டுக்கள் உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா தெரிவித்தார்.
 
மாவட்டத்தின் வெள்ள நிலைமைகள் சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்று வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் அங்கு கருத்து தெரிவிக்கையில், "இம்முறை பெய்த மழை வரலாற்றில் வித்தியாசமானது. இதன் காரணமாக மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதித்துள்ளது. 11 பிரதேச செலயக பிரிவுகளிலும் இதன் தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதிகளவான தாக்கம் வெருகல் பிரதேச செயலாளர் பரிவிலும், மூதூர் பிரதேச செயலாள்ர் பிரிவிலும் ஏற்பட்டுள்ளது. பதவி சிறிபுர பிரதேச செலயாளர் பிரிவில் மிகக் குறைந்தளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அரச அதிகாரிகளும் படையினரும் மேற்கொண்ட முயற்சி காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்க்ள இவரிகளது இடங்களில் இருந்த வெளியேற்றப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 99 முகாம்கள் வரை ஏற்படுத்தப்பட்டது.

தற்போது 77 முகாம்களில் 8,419 குடும்பங்களைச் சுரந்த 31,910 உறுப்பினர்கள் தங்கி உள்ளனர். தொடர்ந்து வரும் நாட்களில் இத்தொகை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உலக உணவுத் திட்டத்தின் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மூதூருக்கு, திருகோணமலைக்கும் இடையிலான தரை வழிப் பாதையும், கடல்வழிப் பாதையும் தடைப்பட்டுள்ளது. கடற்படை கப்பல் மூலமாகவும் சேருவில 2 என்ற கப்பல் மூலமாகவும் ஈச்சிலம்பற்று, மூதூர் பிரதேச செயலகங்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.சுமார் 75 இலட்சம் பெறுமதியான உணவுப் பொருட்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் துண்டிக்கப்பட்ட கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவு நிவாரண பொதிகள் இன்று இயந்திரப் படகுகள் முலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இப்பொருட்களை கிண்ணியா ஜெம் இய்யத்துல் உலமா சபையினரால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கிண்ணியா பிரதேசத்தில் பூவரசந்தீவு, சம்மாவச்சத்தீவு, நெடுந்தீவு, ஈச்சந்தீவு கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 1,200 ரூபா பெறுமதியான அரிசி, சீனி, மா, நுளம்புச் சுருள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதாக உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.ஆர்.ஏ.நஸார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .