Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை வங்கி ஊழியர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர். தமது ஒரு நாள் ஊதியத்தில் இருந்த திரட்டப்பட்ட 13 மில்லியன் ரூபாய் பொருட்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அநுராதபுரம், பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்ப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திற்கு 40 இலட்சம் பெறுமதியான பொருட்கள் 1,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இவை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் கப்பல்துறை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கும், ஹோமரன்கடவெல பிரதேச செலயாளர் பிரிவில் 400 குடும்பங்களுக்கும், மொரவே பிரதேச செயலாளர் பிரிவில் 200 குடும்பங்களுக்கும், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 150 குடும்பங்களுக்கும், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் சமிந்த வெலகெதர, திருகோணமலை பிரதான கிளை முகாமையாளர் சரத்குமார மற்றும் இலங்கை வங்கியாளர் சங்கத்தின் பிரதிநிதி அமிர்தலிங்கம், மற்றும் பிரதேச கிளை முகாமையாளர்கள், ஊழியர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago