2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வீடுகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன  நேற்று சனிக்கிழமை கையளித்து வைத்தார்.

பட்டணமும் சூழலும் பிரததேசத்தின் மகுந்தபுரத்தில் அமைக்கப்பட்ட 33 வீடுகளும் . ஆண்டான்குளத்தில்  அமைக்கப்பட்ட 25 வீடுகளும் பயனாளிகளிடம் நேற்றையதினம் கையளிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு  மீன்பிடித்திணைக்களம் எபெட் திட்டத்தின் கீழ் 265 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளும் 500,000 ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  மேற்படி வீடுகளுக்குத்  தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக  கிணறுகள், நீர்த்தாங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  உள்ளக வீதிகளும்  அமைக்கப்பட்டுள்ளன.

பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 71 வீடுகளும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 111 வீடுகளும் குச்சவெளியில்  26 வீடுகளும்  மூதூரில் 47 வீடுகளும் கிண்ணியாவில் 10 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  இதற்காக 136 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது..

நிர்மாணிக்கப்பட்ட ஏனைய வீடுகளும்   விரைவில் பயனாளிகளிடம் கையளிக்கப்படுமென எபெட் திட்டத்தின்  முகாமையாளர் பண்டார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .