2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

திருமலை பாடசாலைகளுக்கு மத்திய வங்கி வெளியீடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

இலங்கை இராணுவத்தின் 221ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு மத்திய வங்கியின் வெளியீடுகள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை நகர மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது இவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை, 221ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் செனவிரத்தன ஆகியோர் கலந்து கொண்டு வெளியீடுகளை வழங்கி வைத்தனர்.

க.பொ.த உயர்தர வர்தகப் பிரிவில் கற்கும் மாணவர்களின் ஆற்றலினை மேலோங்கச் செய்யும் முகமாக இதனை தாங்கள் ஏற்பாடு செய்திருந்ததாக  221ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி குறிப்பட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதில் பரீட்சயம் உடையவர்களாக எதிர்காலத்தில் திகழ வேண்டும் என மாணவர்களுடன் கலந்துரையாடும் போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--