2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

காட்டு யானையினால் பாடசாலை சேதம்

Kogilavani   / 2011 நவம்பர் 15 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)
திருகோணமலையின் புறநகர் பகுதியான வில்கம்வெகற கிராமத்தில் வில்கம்முல சிங்கள வித்தியாலயம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானைகளின் தாக்குதலினால் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

பாடசாலைக் கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் நேற்றிலிருந்து வகுப்புகளை நடத்துவது தடைப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எல்.ஆர்.எம்.தர்மசேன தெரிவித்தார்.

35 மாணவர்கள், 6 நிரந்தர ஆசிரியர்கள், 2 தொண்டர் ஆசிரியர்களை கொண்ட இப்பாடசாலையில்  வறுமைக்கோட்டிற்கு கிழ் உள்ள மாணவர்களே அதிகமாக கல்வி கற்று வருகின்றனர்.

யானையினால் மேற்படி பாடசாலை சேதமாக்கப்பட்ட விடயம் திருகோணமலை வலய கல்விப்பணிமனைக்கு தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை அங்கிருந்து அதிகாரிகள் எவரும் வருகை தரவில்லை என்றும் இந்நிலையில் பாடசாலையின் சொத்துகளை எவ்வாறு பாதுகாப்பது என்று தெரியாது தாம் அவதியுறுவதாகவும் பாடசாலையின் அதிபர் கவலை தெரிவித்தார்.

இப்பாடசாலை சென்ற ஆண்டிலும் யானையினால் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .