2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்மியத்துல் சவாப் நிறுவனத்தின் உதவி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத், கஜன்)


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பெரு மழை காரணமாக கிண்ணியா, மூதூர்  பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா நெடுந்தீவு கிராமத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 300 குடும்பங்களுக்கு ஜம்மியத்துல் சவாப் நிறுவனம் நிவாரணப் பொருட்களை வழங்கியது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜீது இன்று அப்பிரதேசங்களுக்கு சென்று பொருட்களை வழங்கி வைத்தார். ஜம்மியத்துல் சவாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எஸ்.எம்.எஸ்.தாஸிம், உறுப்பினர் வாரித் ஜவாத் அகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இறாள்குழியில் 108 குடும்பங்களுக்கும் சாபி நகரில் 92 குடம்பங்களுக்குமே இவ்வாறான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .