2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திருகோணமலை மாவட்டத்தின்  சின்னம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.றிபாழ் (வயது 23) என்பவர்  புதன்கிழமை (26) உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் ஞாயிற்றுக்கிழமை (23) மோட்டார் சைக்கிளில் கிண்ணியா பாலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, மாபிள் பீச் (பளிங்கு கரை) சந்தியில் விபத்திற்குள்ளானார். உள்ளூர்; சுற்றுலா பயணிகளை மாபிள் பீச்சுக்கு ஏற்றிவந்த  பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில்,  தலையில் பலத்த  காயம் ஏற்பட்ட இவர்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவர் திங்கட்கிழமை (24) தொழில் வாய்ப்பு நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .