2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

நீர்த்தாங்கி கையளிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.ஏ.பரீத்

மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்திற்கமைவாக சுமார் 80 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா பிரதேசத்தில் மகா மாறு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 11 வெள்ளிக் கிழமை (11) இடம் பெற்றது.

சர்வ மத ஆசிர்வாதத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் முதலமைச்சர் நஜீப்- ஏ – மஜீத், புத்த சாசன் மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டி.எச். குணவர்த்தன மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ..தௌபீக் கிண்ணியா பிரதேச சபைத் தலைவர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா, உட்பட அரசாங்க மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இத் திட்டம் பிhன்ஸ் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டு ஒப்பந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந் நீர்த் தாங்கியில் 150 மீற்றர்  கீப் ( 15 இலட்சம் லீற்றர் )சேமித்து வைத்து இதன் மூலம் கிண்ணியா பிரதேச செயலகங்களுக்குட்பட்ட நீர் இணைப்பைப் பெற்ற 6 ஆயிரம் குடும்பங்களுக்கு 24 மணி நேரமும் நீரை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--