2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மூதூரில் மாபெரும் சிரமதானம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மூதூர் முறாசில்

மூதூர் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலானது தீவிரமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து மூதூர் நகரம் முழுவதும்  ஞாயிற்றுக்கிழமை(19)  பாரிய  சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

மூதூர் பிரதேசசபை மற்றும் பட்டதாரிகள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இச்சிரமதானப் பணியில் சமூக நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும்  பொதுமக்களுமென நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டு, வீதிகள் மற்றும்  பொது இடங்களை சுத்தமாக்குவதில் ஈடுபட்டனர்.

இதேவேளை, சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள், சுகாதார  ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரோடு இணைந்து வீடு வீடாகச் சென்று நுளம்பு பெருக்கத்திற்கு வழிவகுக்கும் காரணிகள் தொடர்பாக பொது மக்களுக்கு அறிவூட்டுவதில்  ஈடுபட்டனர்.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர்  மூதூருக்கு விஜயம் செய்து டெங்கு நோய் ஒழிப்புச் செயற்பாடுகளை மதீப்பீடு செய்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--