Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முறாசில்
சுனாமி ஆழிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட மூதூர் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தரவீட்டை அமைத்துக் கொடுப்பதற்கு ஆவண செய்யுமாறு கோரி மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர்; அமீர் எஸ்.ஹமீட் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மூதூர் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த 70இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 10 வருடங்களாக நிரந்தர வீடில்லாத அவலத்துக்கு உள்ளாகி வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் சுனாமியினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மூதூர் பிரதேசமும் ஒன்றாகும். இப்பிரதேசத்திலுள்ள கரையோரக் கிராமங்களான தக்வா நகர், ஹபீப் நகர், பஹ்ரியா நகர் முதலானவை சுனாமியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வனர்த்தத்தின் போது இக்கிராமங்களைச் சேர்ந்த 250இற்கும் அதிகமானோர் இறந்தும் பல நூற்றுக் கணக்கானோர் காயததுக்கும்; உள்ளாகினர். வீடுகளும் உடைமைகளும் முற்றாக சேதமாக்கப்பட்டன.
இத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்ட குடும்பங்களில் ஒரு தொகுதியினருக்கு மட்டும் வீட்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் 70இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த பத்து வருடங்களாக தற்காலிக கொட்டில்களுக்குள் நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் நிர்க்கதியாகியுள்ளன.
சுனாமியினால் சொல்லொண்ணாத் துயரத்தை சுமந்த இம்மக்கள் நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் கடந்த பத்து வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த போதும் அவர்கள் இம்மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கரிசனை காட்டவில்லை.
எனவே, நிரந்தர வீடில்லாது துயருறும் இம்மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தரவீட்டை அமைத்துக் கொடுப்பதற்கு ஆவன செய்யுமாறு இம்மக்களின் சார்பில் தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
6 minute ago
44 minute ago
2 hours ago
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
44 minute ago
2 hours ago
14 Oct 2025