2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி மீது துஷ்பிரயோகம்: நபருக்கு 27 வருட சிறை

Kogilavani   / 2015 ஜூலை 31 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                          

கடந்த 2006 ஆம் ஆண்டு, முள்ளிப்பொத்தானையில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவருக்கு 27 வருட சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

தம்பலாகமம், எட்டாம் கொலனி முள்ளிப்பொத்தானையை சேர்ந்த 11 வயது சிறுமியை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றசாட்டில் எச்.எல்.கபிபுல்லா என்ற 47 வயது நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றாம் நிரூபிக்கப்பட்டதற்கு அமைவாக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாயை நட்டஈடாக செலுத்துமாறும் அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில், ஐந்து வருட சிறைதண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, 50 ஆயிரம் ரூபாயை செலுத்த தவறும்பட்சத்தில் இரண்டு வருட சிறைதண்டனையுமாக 27 வருட சிறைதண்டனை வித்தித்து திருகோணமலை, மேல்நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .