Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை, சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், செல்வநகர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான 1,000 ஏக்கர் காணி சேருவில பௌத்த விகாரைக்குரியதாகக் கூறி நேற்று வியாழக்கிழமை அளவை மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து அப்பிரதேச மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜும்மா தொழுகையின் பின்னர் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தோப்பூர் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், சமூக நலன்புரி அமைப்புக்கள் ஆகியவை இணைந்து முன்னெடுத்திருந்திருந்தன.
சேருவில விகாரைக்கு சுவிகரிப்பு செய்வதற்காக அளவை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆயிரம் ஏக்கர் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் காணப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்தக் காணி விடயத்தில் நிரந்தர தீர்வு எட்டப்படாதுவிடின், இதுபோன்ற எதிர்ப்பு தொடர்ந்து வெளிப்படுத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறினர். தங்களின் பரம்பரைக் காணிகளை மீட்டுத்தருவதற்கான முயற்சிகளை உரிய அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டும் என்று காணிச் சொந்தக்கார்கள் தெரிவித்தனர்.
'முஸ்லிம்களின் காணிகளை சுவிகரிக்காதே', 'நல்லாட்சிக்கு பங்கம் விளைவிக்காதே', 'ஏழை விவசாயிகளின் வயிற்றில் கைவைக்காதே' 'எங்களின் பரம்பரை காணிகள் எங்களுக்கு வேண்டும்' போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆட்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Mar 2021
05 Mar 2021