2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

இலங்கை மீனவர்கள் 22 பேருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

விதிமுறைகளை மீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் 22 இலங்கை மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள், கடற்படையினரால் 19 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்ப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  இவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் பதில் நீதவான் திருச்செந்தில்நாதன் முன்னிலையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை ஆஜர் செய்த போதே அவர்களை நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நிலாவெளி கடற்பகுதியில் வைத்து மூன்று படகுகளில் மீன்பிடிப்பதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் 7 கடல்மைல்க்கு முன்பாக தொழிலில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் நலனைக் கவனிப்பதற்காக  சட்டத்தரணி ஜே.எம்.லாகீரும் பிரசன்னமாகி இருந்தார்.

அண்மைக்காலமாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் ஒததுழைப்புடன்  விதிமுறைகளை மீறி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் திருகோணமலை சிறைச்சாலையில் இது வரை 117 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களில் வியாழக்கிழமை 6 மீனவர்கள், வெள்ளிக்கிழமை 89 மீனவர்கள், ஞாயிற்றுக்கிழமை 22 மீனவர்கள்  இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--