2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

35 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், எப்.முபாரக், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்

மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு  மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 35 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயினும்,  பாதிக்கப்பட்ட சிறுமிகள் எவரையும் அடையாளம் காட்டவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு  மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் ஒத்திவைத்தார்.

மேலும், இந்த வன்புணர்வுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர்  நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X