2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 500 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்

Kogilavani   / 2011 ஜூன் 10 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கதிரவன்)
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 500 பாடசாலை மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளது.

இதில் இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது.

போக்குவரத்து ஆணைக்குழுவின் இலவச துவிச்சக்கர வண்டி வழங்கல் திட்டத்தின் கீழ் இத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தூர பிரதேசங்களிலிருந்தும் கற்கை நடவடிக்கைக்காக வரும் மாணவர்கள் நன்மையடையவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X