2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கு 9 தமிழ், முஸ்லிம் அறிஞர்கள் தெரிவு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக ஒன்பது தமிழ் மற்றும் முஸ்லிம் அறிஞர்களை கிழக்கு மாகாணக்கல்வி மற்றும் பணிப்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவு செய்துள்ளது.

இவர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யு.டி.வெலிக்கல இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

கணபதிப்பிள்ளை பாக்கியராசா (துறைநீலாவணை), ஆறுமுகம் தங்கராசா (ஆரையம்பதி), கணபதிப்பிள்ளை சபாரத்தினம் (ஆரையம்பதி), பேரம்பலம் கனகரத்தினம் (திருகோணமலை), வேலுப்பிள்ளை நாகராசா சந்திரகாந்தி (திருகோணமலை), கோஸ் முகமது அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது), முகம்மது ஹனிபா முகம்மது புகாரி (காத்தான்குடி), பக்கீர் முகையிதீன் கலந்தர்லெவ்வை (அட்டாளைச்சேனை), அப்துல் மஜீத் முகம்மது அலி (கிண்ணியா) ஆகியோர் இலக்கியம், சிறுகதை, கவிதை கலைத்துறை மற்றும் பல்துறை ஆகியவற்றில் ஆக்கப்பணி புரிந்தமைக்காக முதலமைச்சர் விருதுக்கு தெரிவு செய்யபட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிர்வருகின்ற அக்டோர் 18ஆம் திகதி திருகோணமலையில் விவேகானந்தா கல்லூரியில் நடத்தப்படவுள்ள 2012ஆம் ஆண்டுக்குரிய மாகாண கலை இலக்கிய விழாவில் இவர்கள் முதலமைச்சர் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவ்விழாவில் முதன்மை அதிதிகளாக மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமாவும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் பங்குபற்றுவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .