2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

மனித மண்டையோடு கண்டெடுப்பு

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, மணியரசம் குளத்துக்கு அருகாமையில், மனித மண்டையோடு ஒன்று நேற்று  (14) மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வருடத்துக்கு முன்னர், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் சடலம், இதே குளத்தில் முண்டமாக மீட்கப்பட்டுள்ளது. அச்சடலத்திலிருந்து காணாமல் போயிருந்த தலை தொடர்பில் மர்மம் இருந்து வந்த நிலையிலேயே, தற்போது மீட்கப்பட்டுள்ள மண்டையோடு, இவ்விளைஞனுடையதாக இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--