2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

‘மீண்டும் மக்கள் ஆணையைப் பெறுவோம்’

Editorial   / 2019 நவம்பர் 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

“ஜனநாயக வழியில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்று சிறுபான்மையினரின் பலத்தைக் காட்டுவோம்” என தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி தெரிவித்தார்.

தம்பலகாமத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “சிறுபான்மையினரை, இனவாதிகளாகக் காட்ட சிலர் முனைகின்றனர். அப்படியென்றால் வேட்பாளர்களாகக் களமிறங்கிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, சிவாஜிலிங்கம் போன்றோர்களுக்கு வாக்களித்திருப்போம். ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை.

“எமது சமூகத்தை வைத்து பலி தீர்த்து இனச்சாயம் பூச முனைகிறார்கள். இவ்வாறானவற்றை இல்லாமல் செய்து, இந்த நாட்டில் புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்குப் பங்களிப்புகளை, நல்ல நல்ல திட்டங்களுக்கு வழங்குவோம். ஒரு ஜனநாயக நாடாக இலங்கையை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

“இன, மத பேதமற்ற எதிர்கால அரசியலைக் கொண்டு செல்வதே எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இலக்காகக் காணப்படுகிறது. பல்வேறு அபிவிருத்திகளை எமது கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் கண்டுள்ளோம். எதிர்காலத்தில் சரியான முடிவுகளுடன், பெரும்பான்மையோடு ஆட்சியமைப்போம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .