2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மேலுமொரு வங்கி ஊழியருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம். கீத், எப்.முபாரக், அ.அச்சுதன்

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் 24 வயது இளைஞனுக்கு, கொரோனா வைரஸ் தொற்று, இன்று (07) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை நகரில், தனியார் வங்கியொன்றில் பணிபுரியும் இந்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை போதே, தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, இளைஞன் பணி புரிந்த தனியார் வங்கி மூடப்பட்டதுடன், அங்கு கடமை புரியும் 10 ஊழியர்களுக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன .

அன்டிஜன் பரிசோதனையில் அனைத்து ஊழியர்களுக்கும் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதுடன், பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (07) பிற்பகல் முகக்கவசம் அணியாது வீதிகளில் நடமாடிய 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டாய அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. 

இவர்களை எச்சரிக்கை செய்த பொது சுகாதாரப் பிரிவினர், வீடு செல்ல அனுமதித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .