Thipaan / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
'நாடொன்றிலுள்ள மக்களிடையே இன நல்லுறவையும் மத ஐக்கியத்தையும் பேணுவதில், கலாசாரம் என்தோர் அம்சம் முக்கியம் பெறுகிறது' என, கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டல்வல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டல்வல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்து நடாத்திய 'நல்லிணக்கத்துக்;கான ஒரு தளமாக கலாசாரம்' எனும் தொனிப்பொருளிலான பன்மைத்துவ கலாசார விழா, பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில், திங்கட்கிழமை (26) மாலை நடைபெற்றது.
இங்கு உரையாற்றயபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 'இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய இந்நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு, இரண்டாவது வருடமாக நடத்தப்படுகின்றன.
ஒரு நாட்டில் மக்களிடையே இன நல்லுறவையும் மத ஐக்கியத்தையும் பேணுவதில் கலாசாரம் என்ற ஓர் அம்சம் முக்கியம் பெறுகிறது. அந்தவகையில், மக்களிடையே ஒற்றுமையையும் மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவல்ல சிறந்த ஊடகம் கலாசாரம் என்றால் அது மிகையில்லை.
இவ்வருடம் இந்நிகழ்சித்திட்டத்தை இரண்டாக வடிவமைத்திருந்தோம். மாகாணத்துக்கு இடையிலான கலாசாரக் கண்காட்சி பரிமாற்று நிகழ்சித்திட்டம் மற்றயது மாகாணத்துக்குள்ளான கண்காட்சி பன்மைத்துவக் கலாசாரத் திட்டம் என்பனவே அவையாகும்.
இந்த மாத ஆரம்பத்திலே மத்திய மாகாணத்துடன் எமது திணைக்கமும் இணைந்து பரிமாற்றுத் திட்டத்தில் பங்குகொண்டோம் அது மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. மத்திய மாகாணத்திலும் பெரிய வரவேற்பை பெற்றது. அந்தவகையில், இந்நிகழ்வும் முக்கியம் பெறுகிறது' என்றார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டல்வல்கள் மற்றும் மீழ்குடியேற்ற அமைச்சர் சி. தண்டாயுதபாணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனான்டோ, பிரதம செயலாளர் உள்ளிட்ட பல மாகாண உயரதிகாரிகள் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு மூவினங்களையும் பிரதிபலிக்கும் வகையில், பன்மைத்துவ கலை நிகழ்வுகளும் நாடகங்களும் மேடையை அலங்கரித்தன.
15 minute ago
23 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
15 Nov 2025
15 Nov 2025