2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ. எம்.கீத், தீஷான் அஹமட் 

திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில், கங்கை பாலத்தில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில், மூதூர், மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த தர்மசேனன் நித்தியரூபன் (வயது 37) என்பவர் உயிரிழந்துள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 

மூதூரில் இருந்து தம்பலகாமத்துக்கு ஆடைத்தொழிச்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸூம் கிண்ணியாவில் இருந்து மூதூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மேற்படி நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம், மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து குறித்த மேலதிக விசாரணையை மூதூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X