Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 29 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தர-தலல்ல பகுதியில் இன்று (29) பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு தனியார் பஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுள் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இரண்டு பாடசாலை மாணவர்களும் குறித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாத்தறையிலிருந்து ரதம்பல ஊடாக திக்வெல நோக்கி பயணித்த தனியார் போக்குவரத்து பஸ்ஸும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .