2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ரயிலில் மோதி கிராமசேவகர் பலி

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி ரயிலில் மோதி, கஹாவ பிரதேச கிராமசேவகரான 43 வயதான ரோஹன இந்திக்க உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை, வேனமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட இவ்விபத்தின் போது, கிராமசேவகர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள், சுமார் 500 மீற்றர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த விபத்தின் போது, ரயில் பாதுகாப்புக் கடவை திறந்திருந்ததாகவும் அந்நேரத்தில் ரயில் பாதுகாப்புக் கடவையில் பணிபுரியும் நபர் அங்கு இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .