2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்கு வைத்துச் சூடு

Editorial   / 2017 ஜூலை 22 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது இன்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளஞ்செழியன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்புp பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, நல்லூர் தெற்கு வீதி பகுதியில் இருவர், பாதுகாப்பு பொலிஸாரை வழி மறித்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, நீதிபதியின் வாகனத்தில் இருந்த பொலிஸார் வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களை நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில், தர்க்கத்தில் ஈடுபட்டவர், தன் முன் நின்ற பொலிஸாரின் துப்பாக்கியை எடுத்து பொலிஸார் இருவரை நோக்கியும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த பொலிஸார் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .