2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்

George   / 2017 ஜூன் 09 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

சேவையின் நிமித்தம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சஞ்ஜீவ தர்மரட்ன, கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சனிக்கிழமை (10) செல்லவுள்ளார்.

 

கடந்த வருடம் ஜீலை மாதம் முதல், தற்போது வரையான காலப்பகுதி வரை, யாழ். மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களின் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பத்மஸ்ரீ பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்ததவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதி பொலிஸ்மா அதிபர், சனிக்கிழமை (10) கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .