Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஷ்
21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரையில் காணாமலாக்கப்பட்டிருக்கலாம் என, காணாமல் போனோருக்கான அலுவலகம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கையே இறுதியானது எனும் முடிவுக்கு வரமுடியாது எனவும் அந்த அலுவலகத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“காணாமல் போனோருக்கான அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களைபோல் அல்லாது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை கண்டறியும் செயற்பாடுகளில் ஈடுபடும்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, 16 ஆயிரம் பேரும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும், பரணகம ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், கிராம சேவகர்களூடாக, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு பெற்றுக்கொண்டுள்ள தரவுகளின்படி, 13 ஆயிரம் பேரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.” எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே மேற்குறித்த தரவுகளின் அடிப்படையில், உறுதியாக கூறமுடியாவிட்டாலும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago