2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்பு

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்    

தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமான், தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக, இன்று (23) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வு கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள், அமைச்சரின் பிரத்யேக உத்தியோகத்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் மாரிமுத்து, ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் இளைஞரணியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தொழிற்சங்க உதவிச் செயலாளர் பரத் அருள்சாமி என முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .