2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சகாக்களிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள்...

Princiya Dixci   / 2016 மே 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆமி சம்பத் என்றழைக்கப்படும் ரன்செம்புகே சம்பத் ஷாமர பொன்சேகா என்பவருடைய சகாக்கள் என்று கூறப்படும் மூவரை, ஆயுதங்களுடன் கைது செய்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

ராகமை, வெல்லகெ வீதியைச் சேர்ந்த மஹேன் ஸ்ரீ விஜேவர்தன, நீர்கொழும்பு, மஹிமகொடல்ல தோட்டத்தைச் சேர்ந்த சனத் பிரியதர்ஷன ராஜபக்ஷ மற்றும் நிக்கமலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த தம்மட்டகே ஷனுக ஷம்மிக்க ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

இவர்கள் மூவரிடமிருந்து டிஜிட்டல் ரக துப்பாக்கியொன்று, மைக்ரோ ரக மெகசின் ஒன்றும் அதற்கான துப்பாக்கி, 38 S&W Special CTG ரக ரிவோல்வர் ஒன்று, 4.5 ரக துப்பாக்கிக்கான ரவைகள் 23, 2.2 ரக ரவைகள் 72, போரா 12 ரக துப்பாக்கிக்கான ரவைகள் 21, முகக்கவசங்கள் இரண்டு, 1 கிராமும் 280 மில்லிகிராமும் நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள், 25 கிராமும் 382 மில்லிகிராமும் நிறையுடைய ஹசீஸ் ரக போதைப்பொருள், 1 கிராமும் 110 மில்லிகிராமும் நிறையுடைய கஞ்சா ஆகியனவே கைப்பற்றப்பட்டுள்ளதாக பெதலஜஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

கொழும்பு, கொட்டாஞ்சேனை புளுமெண்டல் பகுதியில், தேர்தல் பிரசாரத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு ஒருவரை கொலைச்செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,  தேடப்பட்டுவந்த, பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ஆமி சம்பத் என்பவர், கொழும்பு கொம்பனித் தெருவில் வைத்து, விசேட அதிரடிப் படையினரால் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (பட உதவி: பொலிஸ் ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .