2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

திருத்தப் பணிகள் இரண்டவாது நாளாகவும் தொடர்கின்றன...

Kogilavani   / 2017 ஜூலை 14 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

 

கொட்டகலை 60 அடி பாலத்தருகில், நேற்று அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, தண்டவாள திருத்தப்பணிகள் இரண்டவாது நாளாகவும், இன்று முன்னடுக்கப்பட்டு வருகின்றது.

 

கம்பளை, கண்டி, நாவலப்பிட்டிய உள்ளிட்ட ரயில் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள், தண்டவாள திருத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதன்கிழமை இரவு, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற இரவு தபால் ரயில், கொட்டகலை 60 அடி பாலத்துக்கு அருகில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், தண்டவாளம் முற்றுமுழுதாக சேதமடைந்தது.

இதனால், மலையகத்துக்கான ரயில் சேவை கடந்த இரண்டு நாட்களாக பாதிப்படைந்துள்ளன.

இவ்விபத்தினால், சுமார்  100 மீற்றர் பாதை சேதமடைந்துள்ளதாக, ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்துவதற்காக, கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட ரயில்,  தண்டவாள பணி நிறைவடைம்யவரை, நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, திருத்தப் பணிகள் நிறைவடையும்வரை,   கண்டிக்கு  பொதிகள் கொண்டு செல்லும் ரயிலும் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .