2021 மே 08, சனிக்கிழமை

நிவாரணங்கள் கையளிப்பு…

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ, கோத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணங்களையும் 100 மெட்ரஸ்களையும் முதற்கட்டமாக கோத்தப்பிட்டிய முகையித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளித்தார்.

பின்னர், பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திருப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X