2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வெளிநாட்டுச் சக்திகள் எனது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன - அமைச்

Super User   / 2010 ஜூலை 09 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)
"வெளிநாட்டுச் சக்திகள் எனது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
எனது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு எனது அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறேன்" என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதமிருந்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது இராஜினாமா குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விமல் வீரவன்ஸ உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் இடத்தில் செய்தியாளார் சந்திப்பொன்றை நடத்திய தே.சு.மு. பேச்சாளர் எம். முஸம்மில், விமல் விமல் வீரவன்ஸவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இலங்கை தொடர்பான நிபுணர் குழுவை பான் கீ மூன் வாபஸ் பெறும்வரை விமல் வீரவன்ஸ உண்ணாவிரதத்தை தொடர்வார் எனக் கூறியுள்ளார்.


  Comments - 0

  • Zaman Saturday, 10 July 2010 03:51 PM

    வாழ்த்துக்கள் வீரவன்ச அவர்களே !!!!!!!!!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--