2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஷிரந்தி ராஜபக்ஷ, நடிகை அசின் இன்று காலை வவுனியாவுக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}





ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோப்பிள்ளை மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

தமிழ்க் கலாசாரச் முறைப்படி வரவேற்கப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தைச் சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன், கண் வைத்திய சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றும் அங்குள்ள நோயாளர்களைப் பார்வையிட்டு பரிசுப் பொருள்களையும் ஷிரந்தி ராஜபக்ஷ வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .