Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையக சூழலில் 5,000 தென்னை மரங்களை நடும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலாலியில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்துக்கு அண்மித்த வெற்றுக் காணிகளில் 300 தென்னை மரங்கள் நேற்று வியாழக்கிழமை நடப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கவும் அரசாங்கத்தின் வடக்கிற்கான பொருளாதார அபிவிருத்தி திட்டத்தினை ஆதரிக்கவுமாக முகாம் வளவுக்குள்ளும் யாழ்ப்பாணத்திலுள்ள அரசாங்க காணிகளிலும் 5,000 தென்னைகளை நடுவதற்கு யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையகம் திட்டமிட்டுள்ளது.
யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தென்னைப் பயிர்ச் செய்கை சபையிடமிருந்து தரமான தென்னம்பிள்ளைகள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் அவை படைகளின் தலைமையகத்தில் உள்ள காணிகளில் நடப்பட்டு அவர்களாளேயே பராமரிக்கப்படவுள்ளன.
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் வழிப்படுத்தலில் யாழ்ப்பாணத்தில் பனைகளைப் பேணவும் புதிய பனை மரங்களை நடவும் பனை அபிவிருத்தி சபைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினர் உதவி வருகின்றனர்.
அத்துடன், சகல படையணிகளுக்கும் படைப்பிரிவினருக்கும் பனை விதைகளை சேகரித்து பனை அபிவிருத்தி சபையிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 4 இலட்சம் விதைகளை சேகரிக்கும் வரை இந்தச் செயற்பாடு தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் 30 வருடகால யுத்தத்தில் பல ஏக்கர் கணக்கான பனை மரங்கள் கைவிடப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
56 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago