Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹூசைன்)
மக்கள் விடுதலை முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிலையில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரும் அதில் பங்கேற்றனர்.
அரசாங்கம் எதிர்வரும் வரவு செலவும் திட்டத்தில் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் சம்பள அதிகரிப்பை வழங்கவும் தவறும் பட்சத்தில் அரசாங்கத்தை வெளியேற்றுவோம் என மக்கள் விடுதலை முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தது.
அரசாங்கம் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான சத்தியப்பிரமாண நிகழ்வுகளில் பெருமளவு பணத்தை செலவளித்து வருகிறது. ஆனால் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க மறுக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல மில்லியன் ரூபா பணத்தை ஒரு வார காலமாக தனது பதவியேற்பு தொடர்பான நிகழ்வுகளுக்காக செலவிட்டு வருகின்றார்.
அதேநேரம் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா கூறினார். Pix by:- Kushan Pathiraja
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago
8 hours ago