Menaka Mookandi / 2011 ஜனவரி 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நபீலா ஹுஸைன்)
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் இருவரை கொழும்பு லேடி றிட்ஜ்வே வைத்தியசாலை மருத்துவர்கள் இன்று சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர். இலங்கையில் இத்தகைய சத்திரசிகிச்சை முதல் தடவையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் டி.ஏ.டி. ஜயவர்தன தலைமையிலான 11 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவொன்று தொடர்ச்சியாக ஆறரை மணித்தியாலம் இச்சத்திரசிகிச்சையை மேற்கொண்டது. கடந்த மார்ச் 17 ஆம்திகதி பிறந்த இக்குழந்தைகள் சத்திரசிகிச்சைக்காக லேடி றிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் மஹாநாம ராஜமந்திரி கூறினார்.
அதிஷ்டவசமாக இக்குழந்தைகளுக்கு ஈரல் மாத்திரமே பொதுவாக இருந்தது. அதனால் அவர்கள் பிழைக்கும் சாத்தியம் அதிகமாக இருந்தது எனவும் டாக்டர் ஹாநாம ராஜமந்திரி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் இத்தகைய சத்திரசிகிச்சை நடத்தப்பட்ட போதிலும் இதுவே முதலாவது வெற்றிகரமான சத்திரசிகிச்சை என அவர் கூறினார்.



41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago