Menaka Mookandi / 2011 ஜனவரி 18 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இவ்வருட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக 1996ஆம் ஆண்டு இலங்கை அணி வென்றெடுத்த உலகக் கிண்ணம் இன்று யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர் யாழ்ப்பாண நகருக்கு 1996இல் இலங்கை வென்றெடுத்த உலகக் கிண்ணத்தை எடுத்துச் சென்றபோது ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் தமது வாழ்த்துக்களை கிரிக்கெட் அணியினருக்கு தெரிவித்தனர்.
இந்தக் கிண்ணம் சென்.பெட்ரிக்ஸ் கல்லூரியின் பாண்ட் வாத்திய இசையுடன் நகரின் மையப் பகுதிக்கு எடு;துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. பெரிய பந்து உருவமொன்றில் தமது கையொப்பத்தையிட்டு 2011 உலகக் கி;ணத்தை எமது அணி வெல்ல வேண்டும் என்று வாழ்த்துவதற்காக பாடசாலை பிள்ளைகள் உட்பட ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ஆர்வலர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக்க வலகம, பிரிகேடியர் ரொட்ரிகோவுடன் இன்னும் பல இராணுவ அதிகாரிகளும் பந்தில் கையொப்பமிட்டனர். இந்த கிரிக்கெட் அணியினர் ஸ்ரீ நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆகிய இடங்களில் சமய குருமாரின் ஆசி நாளை பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago