2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கரையொதுங்கிய டொல்பின்...

A.P.Mathan   / 2011 ஜனவரி 23 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் உள்ள மாங்கேணி கடற்கரையில் டொல்பின் இன மீன் ஒன்று நேற்று பகல் கரை ஒதுங்கி உள்ளது.

நேற்று மாங்கேணிக் கடலில் பெரிய உருவமுடைய மீன் ஒன்று வருவதைக் கண்ட மீனவர்கள் அதனைப் பிடித்துள்ளனர். காயமுற்றும் நீந்துவதற்கு இயலாமல் போனதினால் அவ் டொல்பினை கரைக்கு கட்டி இழுத்து வந்துள்ளனர்.

நேற்று மாலைவரை உயிருடன் இருந்த மீன் தற்போது இறந்துள்ளது. இதனைப் பார்வையிடுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக மாங்கேணிக் கடற்கரைக்குச் செல்கின்றனர். இது 14அடி நீளமும் 3அடி சுற்றுவட்டத்தையும் கொண்டுள்ளது. சுமார் 1400 கிலோகிராம் நிறைகொண்ட இந்த டொல்பினை கொழும்பு மட்டக்குளியில் அமைந்துள்ள தேசிய நீரியல் வழ முகாமை ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வாகரை கடற்தொழில் பரிசோதகர் கு.தர்ஜனன், நாரா நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகஸ்தர் சி.நந்தேஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். 

அருகி வரும் டொல்பின் இன மீன்களை பாதுகாப்பதற்காக பல சர்வதேச அமைப்புக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். மாங்கேணிக் கடற்கரையில் இதற்கு முன்னரும் ஒரு டொல்பின் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--