Menaka Mookandi / 2011 மார்ச் 04 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
புத்தளம், கருவலகஸ்வெவ, தப்போவ கிராமத்துக்குள் புகுந்துள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட யானைக்கூட்டமொன்று அங்குள்ள சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்களை நாசப்படுத்தி கிராமவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை குறித்த கிராமத்துக்கு பிரவேசித்த காட்டு இலாகா திணைக்கள அதிகாரிகள் குறித்த கிராமத்தைச் சுற்றி மின்சார வேலிகளை அமைத்து மேற்படி யானைக் கூட்டத்தை வில்பத்து சரணாலயத்தை நோக்கி விரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அந்த முயற்சிகள் பயனளிக்காத நிலையில், குறித்த யானைக் கூமட்டம் மின்சார வேலிகளையும் உடைத்துக்கொண்டு மீண்டும் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் வரிசையாக கிராமத்துக்குள் நுழைவதையும் அவற்றை விரட்டும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Hiran Priyankara Jayasinge





6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago