Menaka Mookandi / 2011 ஜூன் 11 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையிலான இந்திய உயர்மட்டக்குழு இன்ற பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை சந்தித்தது.
இந்த சந்திப்பில், இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷ, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா மற்றும் வெளிவிவகார செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள பூஜை அறையில் ஜனாதிபதியும் இந்திய உயர்மட்டக் குழுவினரும் வாழபாடுகளிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Sudath Silva
.jpg)
12 minute ago
42 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
7 hours ago