Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறாவது சிங்கள வெலிஓயா பிரதேச செயலமாக உருவாக்குவதற்கான முயற்சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை, வவுனியா நகரசபை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சரவணபவன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோநோகராதலிங்கம், ஸ்ரீதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், வவுனியாவிலுள்ள பொதுவமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Romesh Madhushanka, Kapil
paarvayalan Monday, 17 October 2011 06:09 PM
சபாஷ் செரியன மோதல். உங்கள் வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
அது சரி, அபூபக்கருக்கு இங்கு என்ன வேலை?
Reply : 0 0
Nishanthan Monday, 17 October 2011 06:41 PM
சக இனத்தவர்கள் மீதான அநீதிக்கு எதிராகவும் போராடும் அபூபக்கர் பாராட்டப்பட வேண்டியவர்தானே?
Reply : 0 0
Mohammed Hiraz Monday, 17 October 2011 06:53 PM
இதே போன்று வடக்கிலும் கிழக்கிலும் பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்கள் தமிழ் தலைமைகள் தங்களை ஆளவோ நிர்வாகம் செய்யவோ எந்த வித உரிமையோ தகுதியோ கிடையாது என்பதை இப்படி உண்ணாவிரதம் போன்ற ஜனநாயக போராட்டங்கள் மூலம் உலகரிய வைத்து வடக்கும் கிழக்கும் ஒன்றாக்கப்பட்டால் தமிழர் ஆளுகைகுள் தாங்களும் தங்கள் வாழ்விடங்களும் இணைகப்படுவதை தடுத்து நிறுத்தி எதிர்காலத்தில் யாழ்ப்பான முஸ்லிம்கள் போல் வடகிழக்கு வாழ் முழு முஸ்லிம்களும் தென்னிலங்கைக்கு அகதிகளாக செல்ல நேரும் அபாயத்திற்கு ஆப்பு வைத்து தங்கள் நிலங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
Reply : 0 0
kalu Monday, 17 October 2011 08:14 PM
மீனுக்கு காத்து இருந்து குடல் வத்தின கதையாகுமோ ......?
Reply : 0 0
செம்பகம் Monday, 17 October 2011 08:20 PM
எங்கய்யா கூட்டமைப்பு தலைவரக் காணோம் .............?
Reply : 0 0
sampakam Monday, 17 October 2011 08:40 PM
மைதானத்தில் இருக்க இடம் இல்லை ........... அவ்வளவு சனம் ............ போதும் ல.........................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
22 minute ago
29 minute ago