2021 ஜனவரி 16, சனிக்கிழமை

'மோதலிலிருந்து உறுதிப்பாட்டுக்கு'

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட மாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடங்கிய 'மோதலிலிருந்து உறுதிப்பாட்டுக்கு' எனும் தொகுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி செயலணியின் உறுப்பினர்களான வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, றிஷாட் பதியூதீன் ஆகியோரால் இந்த தொகுதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை, அலரி மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு – நலின் ஹேவாபத்திரண)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .