2025 ஜூலை 09, புதன்கிழமை

இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிராக

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பலஸ்தீனம் - காஸா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை அமைதியான கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.

பலஸ்தீனம் - காசா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் எழுதப்பட்ட சுலோகங்களை இதன்போது மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் மாணவர் பேரவை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்டனப் பேரணியில் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (ஹனீக் அஹமட்)







You May Also Like

  Comments - 0

  • jeevseh Thursday, 22 November 2012 01:34 PM

    ஐ.நா.வின் கணக்குப்படி 80,000 தமிழர் கொல்லப்படும்போதும் அரபுலகம் இலங்கைக்கு ஆதரவாக தான் வாக்களித்தது......அதுவும் ஜனநாயகமோ சகோதரர்களு....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .