2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தந்தை செல்வாவின் ...

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவரும் ஈழத்து காந்தி என போற்றப்படும் தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் உள்ள தந்தை செல்வாவின் நினைவாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்னசிங்கம், திருகோணமலை நகரசபை தலைவர் க. செல்வராஐh  மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் உட்பட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா நகர மத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் காலை 6 மணிக்கும் குருமன்காடு காளிகோவிலில் மதியம் 12 மணிக்கும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் நாகநாதன் டேவிட் தலைமையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் ரி. வாமதேவன் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(படங்கள்: வடமலை ராஜ்குமார்,நவரத்தினம் கபில்நாத்)

திருகோணமலை...வவுனியாவில்...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--