2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துக் குழாம் அறிவிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழாமில் புதுமுக வீரராக இளம் வேகப்பந்துவீச்சாளர் ஒலி ஸ்டோன் இடம்பெற்றுள்ளார். தனது திருமணம் காரணமாக இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் தவறவிடவுள்ள வேகப்பந்துவீச்சாளர் லியம் பிளங்கெட்டை, இனிங்ஸின் நடுப்பகுதியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடியவராக ஒலி ஸ்டோன் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தத்தமது காயங்களிலிருந்து குணமடைந்த மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ், டொம் கர்ரன் ஆகியோர் குறித்த குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், முதுகுப் பகுதி காயம் காரணமாக குறித்த தொடரை டேவிட் வில்லி தவறவிடுகின்றார். இந்நிலையில் இவருக்கான நேரடிப் பிரதியீடாக சாம் கர்ரன் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் சாம் பில்லிங்ஸ் இடம்பெறவில்லை என்பதோடு, அடில் ரஷீட், மொயின் அலிக்கு மேலதிகமாக சுழற்பந்துவீச்சாளராக லியாம் டோஸன் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

தம்புள்ளையில் அடுத்த மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் இத்தொடர் ஆரம்பிக்கின்றது.

குழாம்: ஒய்ன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோ, ஜொஸ் பட்லர், சாம் கர்ரன், டொம் கர்ரன், லியாம் டோஸன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கெட், அடில் ரஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--