2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

இந்தியன் வெல்ஸ்: அரையிறுதியில் செரினா, ரட்வன்ஸ்கா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பி.என்.பி பரிபஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் (இந்தியன் வெல்ஸ்) பெண்கள் பிரிவின் அரையிறுதிச் சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ், அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா ஆகியோர் தகுதி பெற்றதோடு, ஆண்கள் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு நொவக் ஜோக்கோவிக், ரஃபேல் நடால், கெய் நிஷிகோரி, ஜோ-வில்பிரட் சொங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

பெண்களின் காலிறுதிச் சுற்றுப் போட்டிகளில், உலகின் முதல் நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப்பை தோற்கடித்ததுடன், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான செக்.குடியரசின் பெட்ரா குவிற்றோவாவை தோற்கடித்தார்.

ஆண்களின் நான்காம் சுற்றுப் போட்டிகளில், உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெய்னின் பெலிசியனோ லொப்ஸியை தோற்கடித்ததுடன், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 6-7, 6-0, 7-5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸான்டர் சுவேரிவ்வை தோற்கடித்ததுடன், உலகின் ஆறாம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி, 1-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 11ஆம் இடத்திலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னரை தோற்கடித்ததுடன்,  உலகின் ஒன்பதாம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ-வில்பிரைட் சொங்கா, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்மை தோற்கடித்தார்.

இதேவேளை, உலகின் நான்காம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்கா, 6-3, 5-7, 7-6 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் டேவிட் கொஃபினிடம் தோல்வியைத் தழுவினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .